எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை பாதிப்பால்...
2021 தமிழக பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
காலியானதாக அறிவிப்பு...
இதில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிச.14 (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது.
இடைத்தேர்தல் அறிவிப்பு...
இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. போட்டி...
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் தி.மு.க போட்டியிடவுள்ளது. அகில இந்திய காங்கிரஸுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு தி.மு.க. போட்டியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீவிர ஆலோசனை...
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது. 2026 சட்டப்பேரவை பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று உறுதிசெய்யப்பட்டது.
தி.மு.க. வேட்பாளரை...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்டியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க. போட்டியிட...
இந்த நிலையில், இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், தி.மு.க. போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார் என கூறியுள்ளார்.
2011-ம் ஆண்டு தேர்தல்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் ஏற்கேனவே இந்த தொகுதியில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்ட அவருக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு தெரிவித்து இருந்தது. அந்த தேர்தலில் வி.சி. சந்திரகுமார் (தே.மு.தி.க.) 69,199 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட சு.முத்துசாமி (தி.மு.க.) 58, 522 வாக்குகளும் பெற்று இருந்தனர். அப்போது பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராஜேஷ்குமாருக்கு 3,244 வாக்குகள் கிடைத்தன.
தி.மு.க. சார்பில்....
இதன்பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரகுமார் தி.மு.க.வில் சேர்ந்து போட்டியிட்டார். அப்போது அவர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார். தென்னரசு 64,879 வாக்குகளும், சந்திரகுமார் 57,085 வாக்குகளும் பெற்று இருந்தனர். தே.மு.தி.க வேட்பாளருக்கு 6,776 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளருக்கு 5,549 வாக்குகளும் கிடைத்திருந்தன. பின்னர் இந்த தொகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா.வும், பின்னர் 2023-ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் (தி.மு.க. கூட்டணி) வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல்வருடன்...
இந்த நிலையில் , ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார், முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன் , கே.என்.நேரு , பொன்முடி , முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 10 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் டெண்டுல்கர்..!
17 Jan 2025மும்பை : கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 மவாட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jan 2025சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி
-
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
17 Jan 2025சென்னை: எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
-
யாருக்கும் ஆதரவும் இல்லை; ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை: த.வெ.க. அறிவிப்பு
17 Jan 2025சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை என்று தவெக அறிவித்துள்ளது.
-
பரந்தூர் செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்: ஏகனாபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு
17 Jan 2025சென்னை : த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-01-2025.
17 Jan 2025 -
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக வரும் 19ம் தேதி ஞாயிறு மண்டபம் - சென்னை எழும்பூர் (06048), தூத்துக்குடி - தாம்பரம் (06168),மதுரை - சென்னை எழ
-
தலைசிறந்த தேசியவாதி: எம்.ஜி.ஆருக்கு அண்ணாமலை புகழாரம்
17 Jan 2025சென்னை : பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர். என அண்ணாமலை கூறியுள்ளார்.
-
இந்தியா வர்த்தக மைய கண்காட்சி; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2025புதுடெல்லி: டெல்லியில் 6 நாட்கள் நடைபெறும் இந்தியா வர்த்தக மைய கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தகவல்
17 Jan 2025சென்னை : மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பரிசுடன் ரூ.2,000 வழங்க உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Jan 2025சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பரிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் உத்
-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு அரசு வேண்டுகோள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள
-
புனேவில் விபத்து - 9 பேர் பலி
17 Jan 2025புனே : புனேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
-
ஈரோடு கிழக்கில் இருமுனை போட்டி
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
குமரி கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலி குற்றவாளி என தீர்ப்பு: தண்டனை இன்று அறிவிப்பு
17 Jan 2025திருவனந்தபுரம் : கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவரை காதலி கொலை செய்த வழக்கில் காதலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
-
எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல்
17 Jan 2025புதுடில்லி : மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளி
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
17 Jan 2025சேலம் : நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகம் காரணமாக , மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. &nbs
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சந்திரபாபு
17 Jan 2025புதுடெல்லி : ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட
-
எளியவர்களின் விருப்பத்துக்குரியவர்: எம்.ஜி.ஆருக்கு கமல்ஹாசன் புகழாரம்
17 Jan 2025சென்னை : ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
தவறி விழுந்ததில் போப் பிரான்சிஸ் காயம்
17 Jan 2025ரோம் : போப் பிரான்சிஸ் கடந்த ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
-
மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆருக்கு ஆந்திர துணை முதல்வர் புகழாரம்
17 Jan 2025சென்னை : தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்: என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 3-வது ஆண்டாக சரியும் சீனா மக்கள் தொகை
17 Jan 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
108-வது பிறந்தநாள்: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை
17 Jan 2025சென்னை: 108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.
-
வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு
17 Jan 2025சென்னை: வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.