முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்கை மாற்ற விவகாரம்: மெட்டாவுக்கு பிரேசில் கெடு

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      உலகம்
Meta-2024-10-17

Source: provided

பிரேசிலியா : மெட்டாவின் கொள்கை மாற்ற விவகாரத்தில் 72 மணிநேர பிரேசில் காலக்கெடு விதித்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான மெட்டா நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இதுவரை மரபாக கடைப்பிடித்து வந்த உண்மை கண்டறியும் நடைமுறையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதன்படி, தகவல்களை சரிபார்க்கும் திட்ட கொள்கை கைவிடப்படும் என்ற முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால், அதன் தளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல் பரிவர்த்தனை பற்றிய விசயங்களில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் கைவிடப்படுகின்றன என தெரிகிறது.இந்த சூழலில், உண்மை கண்டறியும் நடைமுறையில் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகள் கைவிடப் படுவது பற்றி விளக்கம் அளிக்கும்படி கோரி மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக 72 மணிநேர காலக்கெடுவும் விதித்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், ஆபத்து சூழலிலுள்ள பாதுகாப்பற்ற மக்கள் மற்றும் வணிக சூழலை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறையை பிரேசில் கொண்டுள்ளது. டிஜிட்டல் படுகொலை மற்றும் காட்டு மிராண்டித்தனம் ஆகியவற்றால் இந்த சூழலை மாற்ற நாங்கள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, பிரேசில் நிதி மந்திரி பெர்னாண்டோ ஹத்தட்டின் ஏ.ஐ. வீடியோ ஒன்றை நீக்கும்படியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த காலங்களில், டிக்டாக் மற்றும் எக்ஸ் போன்ற வலைதளங்களுக்கு எதிராக தற்காலிக சேவை முடக்கம் என்ற சட்ட ரீதியிலான நடைமுறையை பிரேசில் எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து