எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையின் போது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்ய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சிறப்பு பார்வையாளர்கள் ஆன்லைன் தளங்கள், யு.பி.ஐ. மற்றும் டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். பொதுமக்களின் வசதிக்காக சில கேஷ் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்படுகிறது. உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் இருசக்கர வாகனங்களுக்கும், பூங்காவில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பூங்கா நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றி செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் தொடர்பு எண்ணைக் குறிப்பிடும் வகையில் கை வளையம் வழங்கப்படும், எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் 150 போலீசார் மற்றும் சென்னை, வேலூர், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து 115 சீருடை வன ஊழியர்களும் 50 என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பார்வையாளர்களுக்காக மருத்துவ குழுவுடன் கூடிய சிறப்பு உதவி மையம் 4 அமைக்கப்படும் 4 மருத்துவ குழுவுடன் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படும். அவசர சூழலையும் கையாளும் வகையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் கிடைக்கும். பார்வையாளர்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் நிரம்பிய உணவு பொருட்களையோ பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையோ கொண்டு வர வேண்டாம். புகையிலை, மதுபானம் மற்றும் ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பூங்கா பார்வையாளர்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரவும், பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஒ. தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக தடையில்லா மின்சாரம் மற்றும் நீர் வினியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனம் மற்றும் சபாரி வாகனம் வருகிற 15 மற்றும் 16-ந்தேதி அன்று நிறுத்தப்படும். இன்று திறன் அடிப்படையில் செயல்படும். நீலகிரி மந்தி, சிங்கவால் குரங்கு, இந்திய காட்டெருது, நீலமான், கூழைக்கிடா போன்ற அரிய வகை இனங்களில் சமீபத்தில் பிறந்தவை பார்வையாளர்கள் பூங்காவில் காணலாம்.
க்ரிபோன் கழுகு, எகிப்திய கழுகுகள் மற்றும் அனுமான் குரங்கு போன்ற சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகளை பார்வையாளர்கள் பார்க்கலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க, நாளை மற்றும் நாளை மறு நாள் மீன்வளம் மற்றும் பட்டாம்பூச்சி பூங்கா போன்ற மூடிய அடைப்புகள் மூடப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதற்காக விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த தகவல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
இன்றைய ராசிபலன்
29 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி
-
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026


