முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் பலர் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      உலகம்
Trump 2024-12-21

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப், இன்று (ஜன. 20) பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், 'டிரம்ப்பிசத்தை' எதிர்ப்பதாகக் கூறி, தலைநகர் வாஷிங்டனில் 3 வெவ்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர், பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காலநிலை மாற்றம், குடியேற்றம், பெண்கள் உரிமை உள்ளிட்ட காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டிலும் டிரம்ப் பதவியேற்பின்போது, இவ்வாறான போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால் டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்ச்சி பொதுவெளியில் நடத்த இயலாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். 40 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூடிய திடலுக்குள் நடத்தப்படும் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியைக் காண, கேபிடல் ஒன் அரினா ஹாக்கி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து