முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சைப் அலிகான் வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      சினிமா
Saif-Ali-Khan 2025-01-17

Source: provided

மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் சைப் அலி கானை தாக்கிய நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், விசாரணையில் அவர் காவல் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள முக்கிய தகவல்களை மும்பை காவல் துறை செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளது.

மும்பை துணை காவல் ஆணையர் தீக்‌ஷித்குமார் அசோக் கெடாம் கூறியதாவது: கைதாகியுள்ள நபர் நடிகர் சைப் அலி கான் வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். 30 வயதான அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேஸாத் என்ற இயற்பெயர் கொண்ட அவர், ‘விஜய் தாஸ்’ என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார்.

அவரிடம் மத்திய தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் ஏதுமில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன் அவர் மும்பை வந்தடைந்து இங்குள்ள வீட்டு வேலை பணி சார் ஆள்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அந்த நபர் ஆஜர்படுத்தப்பட்டபின் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றத்தில் வாதிடப்படும் என்றார். 

முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரச வம்சத்தை சேர்ந்தவருமான பட்டோடியின் மகனான நடிகர் சைப் அலி கான் வீட்டுக்குள் நுழ்ந்த நபரை அவர் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்தபோது அந்த நபர் கத்தியால் சைப் அலி கானை குத்தி  விட்டு தப்பிவிட்டார். இதில் சைப் அலி கான் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் விழுந்த சைப் அலி கான் அதன்பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து