முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறோம்: தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

மும்பை : டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம்  கம்பீர் தெரிவித்துள்ளார்.

தொடரை வென்றது...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் பிப்ரவரி 2 ம்- தேதி நிறைவடைந்தது. அன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி, 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதிக ரிஸ்க்...

இந்திய அணி டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம்  கம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி டி20 போட்டிகளில் இதுபோன்று அதிரடியாக விளையாட விரும்புகிறது. அதிரடியாக விளையாடும்போது தோல்வியடையவும் வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தோல்வியைக் கண்டு பயப்படவில்லை. நாங்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம். அதிக ரிஸ்க் எடுப்பதற்கு அதிக பலன்களும் இருக்கும். அதிரடியாக விளையாடுவதற்கான பாதையை இந்திய அணி வீரர்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர்.

தொடர விரும்புகிறோம்...

டி20 போட்டிகளில் நாங்கள் தொடர்ச்சியாக 250 அல்லது 260 ரன்கள் குவிக்க முயற்சி செய்வோம். சில போட்டிகளில் 120 அல்லது 130 ரன்களுக்கு ஆட்டமிழக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அதுதான் டி20 கிரிக்கெட்டின் அழகே. அதிக ரிஸ்க் எடுத்து விளையாடாவிட்டால், அதிக பலன்கள் இருக்காது. நாங்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். எதிர்வரும் மிகப் பெரிய தொடர்களிலும் இதனையே தொடர விரும்புகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து