முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமியில் புனித நீராடிய 62 லட்சத்துக்கும் அதிகமானோர்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      இந்தியா
UP 2025-01-12

Source: provided

பிரயாக்ராஜ் : கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு  நேற்று காலை நிலவரப்படி 62.25 லட்ச பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இத்துடன் கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிகோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். இதனிடையே வசந்த பஞ்சமியின் முக்கிய நீராடல் விழாவையொட்டி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.

பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா். இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா். இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் நேற்று நடைபெற்றது. கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த மேளா பகுதியின் அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து