முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி : மத்திய வெளியுறவு செயலர் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      இந்தியா
Modi

Source: provided

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றப் பின் மோடியின் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும். டிரம்ப் பதவியேற்றப் பின்னர் அமெரிக்கா செல்லும் மிக முக்கியத் தலைவர்களுள் மோடியும் ஒருவர்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி பிரதமர் மோடி குடியேற்றம், அமெரிக்க உற்பத்தி பொருள்கள், இருதரப்பு உறவுகள் குறித்து டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினார். அமெரிக்காவின் நவீன திட்டங்களில் கூட்டாளியாகக் கருதப்படும் இந்தியா, இருநாட்டு வர்த்தகத்தை எளிதாக்கவும், விசா நடைமுறையை எளிமைப்படுத்தவும் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. மேலும், சொகுசு கார்கள், மின்கலன்கள், ரசாயனப் பொருள்கள் மீதான இறக்குமதி வரி குறித்து மறுபரிசீலனை செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா - இந்தியா இடையேயான இருநாட்டு வர்த்தகம் 2023-24 ஆம் ஆண்டில் 118 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து