முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் புளி உள்பட ஐந்து விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
MRK-2-2025-03-15

Source: provided

சென்னை : வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு. பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும். உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும். 

அனைத்து வேளாண் பணிகளையும் இயந்திரம் ஆக்கும் நோக்கில், ரூ. 3 கோடியில் இது குறித்து உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். 300 கிராம இளைஞர்களுக்கு மன் அள்ளும் இயந்திரம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். வேளாண் வணிகத்துறை மூலம் 100 மதிப்பு கூட்டு அலகு அமைக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும். உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும். இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து