முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன மழை எச்சரிக்கை எதிரொலி: இன்றைய ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா?

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி மற்றும் தொடக்க விழா நிகழ்வுகள் மழையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஐ.பி.எல். முதல் போட்டி...

18-வது ஐ.பி.எல். தொடரில் முதலாவது போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக, பிரமாண்ட தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் நடன நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் பாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு...

இந்த நிலையில், போட்டி நடைபெறும் மாநிலமான மேற்கு வங்கத்தில் பிர்பும், நடியா, முர்ஷிதாம் உள்ளிட்டப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இன்னும் சில இடங்களில் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக கொல்கத்தாவில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும்...

போட்டியின் தொடக்கத்தில் 10 சதவிகிதம் மட்டுமே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 11 மணியளவில் 700 சதவிகிதம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டி முழுமையாகப் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. 

ரசிகர்கள் கவலை...

மேலும், டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட தொடக்கவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்படும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து