எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்க கோரி தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மக்களவையில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் மக்களவையில் இந்த தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி நேற்றும் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனால் அவை கூடியதும் தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும். தி.மு.க.வினரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருவதால் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தமிழக எம்.பி.க்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


