எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனமுவந்து பிரிவதாக கூறி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த நிலையில் இசையப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, மனமுவந்து பிரிவதாக இருவரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். முன்னதாக நீதிமன்றத்துக்கு ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஒரே காரில் வந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


