முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய் : கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      தமிழகம்
Raid 2024-12-21

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான நேற்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.

இந்த நிலையில், நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை விட ரூ.16 கோடி அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி வரையான காலத்தில் அபராதமாக மட்டும் ரூ.60 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ்நேர சென்சார் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதேபோல, பூண்டி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிவின் அளவு ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. பேபி அணையை வலுப்படுத்த 15 மரங்களை அகற்ற வேண்டிய சூழல் உள்ளது; அதற்கான உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுத்த போதிலும் கேரள அரசு ஒத்துழைக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து