எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சுனில் நரைன் தனது சுழல் பந்து வீச்சினால் சி.எஸ்.கே. பேட்டர்களை திணறடித்தார். 4 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பௌலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 18 பந்துகளில் 44 ரன்கள் குவித்து மிரட்டினார். அதனால், ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
ஐ.பி.எல். வரலாற்றில் இது சுனில் நரைனுக்கு 16ஆவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக கே.கே.ஆர். அணிக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ரஸ்ஸலை முந்தி சுனில் நரைன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் ஏபிடி வில்லியர்ஸ் 25 முறை ஆட்டநாயகன் விருது வாங்கி முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக கிறிஸ் கெயில் (22), ரோஹித் சர்மா (19), விராட் கோலி (18), வார்னர் (18), தோனி (17) இருக்கிறார்கள்.
_________________________________________________________________________________________
க்ளென் பிலிப்ஸ் விலகல்
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை க்ளென் பிலிப்ஸை பயன்படுத்தாக குஜராத் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. இருப்பினும் சிறந்த பேட்டர், பீல்டர், சுழல்பந்துகளை வீசக்கூடிய பிலிப்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது கவனிக்கத்தக்கது.
சன்ரைசஸ் போட்டியில் 5ஆவது ஓவரில் பீல்டிங்கிற்கு வந்தார் க்ளென் பிலிப்ஸ். பிரசித் கிருஷணா வீசிய ஓவரில் 4ஆவது பந்தில் வேகமாக பீல்டிங் செய்வார். அப்போது இந்தக் காயம் ஏற்பட்டது. கடந்த ஏப்.3ஆம் தேதி ககிசோ ரபாடா தனிப்பட்ட காரணத்தினால் அவரது சொந்த நாட்டிற்கு திரும்பினார். எப்போது திரும்பி வருவார் எனக் கூறவில்லை. இந்த சீசனில் வெறுமனே 7 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே குஜராத் அணி வாங்கியது. அதில் 2 வீரர்கள் இல்லாமல் இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
_________________________________________________________________________________________
சென்னை அணி குறித்து ஹஸ்ஸி
வெள்ளிக்கிழமை அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சி.எஸ்.கே.-வை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இது குறித்து மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது:- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மந்தமான பேட்டிங் லைன்-அப் இந்த ஆட்டத்திலும் அப்பட்டமாக வெளிப்பட்டது. “ஆட்டத்தின் முடிவு மற்றும் அணியின் செயல்பாடு எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் அணியின் ஆட்ட பாணி குறித்து அதிகம் பேசப்படுகிறது. எங்கள் வீரர்களை அவர்களின் இயல்பு தன்மையில் இருந்து மாறுபட்டு ஆடுமாறு நாங்கள் சொல்வதில்லை.
மேலும், அணியில் சிறந்த வீரர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது. அணியில் ருதுராஜ் இல்லாதது பெரிய இழப்பு. இந்த சீசனில் இதுவரை தொடர்ச்சியாக சிறந்த முறையில் நாங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை ஏற்கும் முதல் நபர் நானாக இருப்பேன். அதே நேரத்தில் அணியின் பலம் மற்றும் திறனை வைத்து பார்க்கும் போது பிளே-ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
_________________________________________________________________________________________
கோலி வரலாற்று சாதனை
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. டில்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 14 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த போட்டியில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஐ.பி.எல். வரலாற்றில் 1000 பவுண்டரிகள் (721 போர்கள், 279 சிக்ஸர்கள்) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் அதிக ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி, அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி இன்னும் ஒரு அரைசதம் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவரைச் சேரும். டி20 போட்டிகளில் 100 அரைசதங்களுடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


