முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மதுரை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

மதுரை : சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சித்திரைத் திருவிழாவுக்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி நிர்வாகமே செய்ய வேண்டும் எனவும், பணத்தை பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து