Idhayam Matrimony

கொடியேற்றத்துடன் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Tanjore-Temple-2024-02-08

Source: provided

தஞ்சை : உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளி கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய துணிகளை கொண்டு நந்தி பெருமான் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிமரத்தில் சிவ கனங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 18 நாள்கள் நடைபெறும் விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து