முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகள் இடித்து தகர்க்கப்பட்டது

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      இந்தியா
Terrorist-house-destroyed-2

 ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பில் செயல்பட்டு வந்த மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு, நேற்று முன்தினம் (ஏப்.25) இடிக்கப்பட்டதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்திலுள்ள முரான் கிராமத்தில் பயங்கரவாதியான எஹ்ஸான் - உல் - ஹக் ஷேக் என்பவரின் வீடு அடையாளம் காணப்பட்டு இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. இதேபோல், குல்காம் மாவட்டத்திலுள்ள மதால்ஹாமா கிராமத்தில், கடந்த 2003-ம் ஆண்டு முதல் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் செயலாற்றி வந்த ஜாகிர் அஹமது கனி என்பவரின் வீட்டை அதிகாரிகள் இடித்துள்ளனர்.

மேலும், ஷோபியனில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஷாஹித் அஹமது குதாயின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட ஆசிஃப் அஹமது ஷேக் திரால் மற்றும் ஆதில் தோகர் பிஜ்பெரா ஆகிய இருவரின் வீடுகளும் நேற்று முன்தினம் இடித்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து