முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்கம்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Kailash-Mansarovar 2025-04-

Source: provided

புதுடெல்லி : கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்றாகும். இது சிவபெருமானின் இருப்பிடமாக இந்துக்களால் கருதப்படும் கைலாஷ் மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரையாகும்.

கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா தங்கள் ராணுவ படைகளை எல்லையில் உள்ள தெம்சோக் மற்றும் தெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து திரும்ப பெற்றதை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது. இதன்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடப்பாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தலா 50 யாத்ரீகர்களை கொண்ட 5 குழுக்கள் உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும், 10 குழுக்கள் சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகவும் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை kmy.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கணினி செயல்முறை மூலம் யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து