முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு தான் முதன்மையானது : சி.எஸ்.கே.வின் பதிவு வைரல்

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      விளையாட்டு
CSK 2024-03-11

Source: provided

சென்னை : ஐ.பி.எல். போட்டிகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தான் முதன்மையானது என்ற சி.எஸ்.கே.வின் பதிவு வைரலாகியுள்ளது 

ஒத்திவைப்பு...

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு, மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் -டில்லி போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல். போட்டிகள்  ஒத்திவைக்கப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளது.

நாடு தான் முதன்மையானது....

இந்நிலையில் சி.எஸ்.கே. அணி எம்.எஸ்.தோனியின் வாசகத்தை பதிவாக வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “நாடுதான் முதன்மையானது. மற்ற விஷயங்கள் எல்லாம் காத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்தப் பதிவில், “ஓவ்வொரு அடியிலும் தைரியம். ஒவ்வொரு துடிப்பிலும் பெருமை. நமது ராணுவத்துக்கு சல்யூட்!” எனவும் பதிவிட்டுள்ளது. இந்த வசனத்தை எம்.எஸ்.தோனி தனது குழந்தையைப் பார்க்கச் செல்லாமல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும்போது கூறியவை என்பது கவனிக்கத்தக்கது.

தகுதி இழந்தாலும்... 

இந்த சீசனில் சுமாராக விளையாடிய சி.எஸ்.கே. பிளே ஆப் தகுதியை இழந்தாலும் கடைசி நேரத்தில் இளம் வீரர்களை களமிறக்கி சிறப்பாக விளையாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து