முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர கால உதவிக்கான ஆள்சேர்ப்பு முகாம்: சண்டிகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள்..!

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

Source: provided

 சண்டிகர் : இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக இணைந்து, அவசரகால முன்தயாரிப்புகளுக்கு உதவும் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்களாக பதிவு செய்ய பெரும் அளவிலான இளைஞர்கள் நேற்று சண்டிகரில் திரண்டனர். தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். இது மக்களின் உணர்வுகளையும், இக்கட்டான நேரத்தில் நாட்டுக்கு சேவை செய்ய அவர்கள் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

இதுகுறித்து சண்டிகர் நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் தொகுதி சிவில் பாதுகாப்பு தன்னார்வளர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி தாகூர் அரங்கில் தொடங்கியுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் விரைவில், செக்டார் 17-ல் உள்ள திரங்கா பூங்காவில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த பயிற்சி அமர்வுக்கு சரியான நேரத்திலான உங்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதாகும்.” என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து