முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வாஜ்பாய் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார்: பிரதமர்

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

டெல்லி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வாஜ்பாய் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார் என்று அவரது நினைவுநாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்த வாஜ்பாய் 1957ம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 1998ம் ஆண்டு முதல் 2004 வரை நாட்டின் பிரதமராக வாஜ்பாய் செயல்பட்டார். இதையடுத்து 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ம் தேதி தனது 93வது வயதில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அடல் பிகாரி வாஜ்பாயின் 7வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தில் அவரை நாம் நினைவுகொள்வோம். இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் வாஜ்பாய் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து