Idhayam Matrimony

பிரதமர், முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா பழி​வாங்​கும் நோக்​கில் பயன்​படுத்​தப்பட மாட்​டாது: அமித்ஷா திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      இந்தியா
amitsha

புதுடெல்லி, சிறை​யில் இருந்​த​படி பிரதமர் ஆட்சி செய்​ய​லா​மா என மத்​திய அமைச்​சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்​ளார். மேலும் பிரதமர், முதல்வர் பதவியை பறிக்கும் மசோதா பழி​வாங்​கும் நோக்​கில் பயன்​படுத்​தப்பட  மாட்​டாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவை​யில் அரசி​யல் சாசன (130-வது திருத்த) மசோதா கடந்த வாரம் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதன்​படி, 5 ஆண்​டு​களுக்​கு மேல் தண்​டனை விதிக்க வகை செய்​யும் குற்​றச்​சாட்​டின் கீழ் பிரதமரோ முதல்​வரோ அமைச்​சர்​களோ கைது செய்​யப்​பட்​டு, 30 நாட்​களுக்கு மேல்சிறை​யில் இருந்​தால், சம்​பந்​தப்​பட்​ட​வரின் பதவி தானாகவே பறி​போகும் என அதில் கூறப்​பட்​டுள்​ளது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

மத்​திய உள் துறை அமைச்​சர் அமித் ஷா செய்தி நிறு​வனம் ஒன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் இதுகுறித்து கூறிய​தாவது: இப்​போது உள்ள சட்​டப்​படி, சிறை​யில் இருக்​கும் ஒரு​வர் அரசை அமைக்​கலாம். சிறையை முதல்​வர் அல்​லது பிரதமர் அலு​வல​க​மாக மாற்​றலாம். இது எப்​படி சரி​யாகும்? பிரதமரோ அல்​லது முதலமைச்​சரோ, நாட்​டையோ அல்​லது ஒரு மாநிலத்​தையோ சிறை​யில் இருந்து ஆட்சி செய்​ய​லா​மா? இந்த நடை​முறையை நானும் என்​னுடைய கட்​சி​யும் முழு​மை​யாக நிராகரிக்​கிறோம்.

சிறை​யில் இருக்​கும் ஒரு​வர் நாட்டை ஆட்சி செய்​யக்​கூ​டாது. இந்த மசோ​தா, முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி கொண்​டு​வந்த 39-வது திருத்​தம் போன்​றது அல்ல. அந்த மசோதா பிரதமர் உள்​ளிட்​டோருக்கு விலக்கு அளித்​திருந்​தது. ஆனால் இப்​போதைய மசோ​தாவுக்கு பிரதமரும் கட்​டுப்​பட்​ட​வர் ஆவார். இந்த மசோ​தா​வில் தன்​னை​யும் சேர்த்​துக் கொள்​ளு​மாறு பிரதமர் மோடி கேட்​டுக் கொண்​டார்.

எதிர்க்​கட்​சிகள் கூறு​வது போல் இந்த சட்​டம் பழி​வாங்​கும் நோக்​கில் பயன்​படுத்​தப்பட மாட்​டாது. குறிப்​பாக, குற்​றச்​சாட்​டில் முகாந்​திரம் இல்​லா​விட்​டால் நீதி​மன்​றம் சம்​பந்​தப்​பட்ட நபருக்கு 30 நாட்​களுக்​குள் ஜாமீன் வழங்​கி​விடும். அரசை சிறைகளில் இருந்து நடத்த முடி​யுமா என்பதை மக்​கள் முடிவு செய்​வார்​கள்​. இவ்​வாறு அவர் அமித் ஷா​ தெரிவித்​தார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து