முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ சேவை

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Metro-Rail-2024-10-24

சென்னை, பூந்தமல்லி - போரூரில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், விரைவில் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பூந்தமல்லி - போரூர் வரை, மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. மின்சாரம், காற்றழுத்தம், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆகஸ்டு 16ம் தேதி தொடங்கிய சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே மெட்ரோ ரயில் சோதனைகள் நிறைவடைந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து