முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      விளையாட்டு
India-Afghan 2025-09-19

Source: provided

துபாய் : ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றது.

முதலில் பேட்டிங்...

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பாக்., திணறல்....

குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் அரைசதமடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பர்கான் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சைம் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பகார் ஜமானும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 114-2 என வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

147 ரன்கள் இலக்கு...

இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் வெறும் 12 ரன்களில் அவுட்டானார்.

திலக் வர்மா....

தொடர்ந்து வந்த திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களில் சஞ்சு சாம்சன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். அவருக்கு சிவம் துபே பக்கபலமாக இருந்து 33 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

ஆட்டநாயகன் திலக் வர்மா 

சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, போட்டியில் அழுத்தம் இருந்தது. பாகிஸ்தான் நன்றாக பந்து வீசினர். அவர்கள் வேகத்தை கலக்கி போட்டார்கள். நான் நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு அமைதியாக விளையாட முயற்சித்தேன். அழுத்தத்தின் கீழ் துபே பேட்டிங் செய்த விதம் உதவிகரமாக இருந்தது. அது நம்முடைய நாட்டுக்கு முக்கியமானதாகவும் அமைந்தது. நாங்கள் அனைத்து இடங்களிலும் விளையாடத் தயாராக இருக்கிறோம் என்றார்.

இந்திய அணிக்கு ரூ.21 கோடி 

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு தொகை அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய அணியின் வெற்றி மிகவும் சிறப்பானது. ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு வழங்கப்படுகிறது. பரிசு தொகை வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும். தோல்வியை சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து