முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க.வுக்கு ஐகோர்ட் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
chennai-high-court 2025-01-01

சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அப்போது விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர்," விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? த.வெ.க. பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இந்த தாமதம். பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்கள்?

சம்பவம் நடந்தவுடன் த.வெ.க.வினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து