முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 போர்களை நிறுத்தியுள்ளேன்: நோபல் பரிசு கிடைக்காத குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரக்தி

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      உலகம்
Trump 2024-02-17

Source: provided

வாஷிங்டன் : ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியாது. அவர் ஒன்றும் செய்யவில்லை நமது நாட்டை அழித்தார். நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என்று நோபல் பரிசு தனக்கு அறிவிக்கப்படாத நிலைியல் அதிபர் ட்ரம்ப் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் மோதல் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். அதேவேளை, ட்ரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பரிந்துரை செய்துள்ளன. அதேவேளை, அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த பரிசு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியாது. அவர் ஒன்றும் செய்யவில்லை நமது நாட்டை அழித்தார். நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்’ என்றார்.

2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுக்கு கொடுக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்ற 9 மாதத்தில் ஒபாமா நோபல் பரிசு வென்றார். நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவு மக்களிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியதாக ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து