முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழி எனக்கு எப்போதுமே தடையாக இருந்தது இல்லை : எம்.எஸ்.தோனி பேச்சு

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      விளையாட்டு
Dhoni 2024-10-26

Source: provided

மதுரை : என்னுடைய ரசிகர்களுடன் பேச மொழி எனக்கு எப்போதுமே தடையாக இல்லை என்று எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

ரூ.325 கோடி செலவில்.... 

மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் ரூ.325 கோடி செலவில் சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்துக்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இதை இந்திய முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி நேற்று திறந்து வைத்தார். மைதானத்தை பேட்டரி காரில் சுற்றி வந்த தோனி, சிறிது நேரம் கிரிக்கெட்டும் ஆடி மகிழ்ந்தார். 

ரசிகர்களுடன் பேச...

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,‘உலகத்தரம் வாய்ந்த வசதி வாய்ப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானம், எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத் தளமாக விளங்கும்’ என்று குறிப்பிட்டார். மேலும் என்னுடைய ரசிகர்களுடன் பேச மொழி எனக்கு எப்போதுமே தடையாக இல்லை. யாராவது என்னிடம் தமிழ் தெரியுமா? என கேட்டால், மதியம் சாப்டிங்களா? இரவு சாப்டிங்களா? என கேட்பேன். என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து