முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      விளையாட்டு
West-Indies 2024-05-09

Source: provided

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (ஒருநாள், டி20) ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணி விவரம்: 

ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அத்தானஸ், அக்கீம் அகஸ்டீ, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஜஸ்டீன் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கோ, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோடி, கேரி பியரே, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

டி-20 அணி விவரம்: 

ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அத்தானஸ், அக்கீம் அகஸ்டீ, ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அஹேல் ஹொசைன், அமீர் ஜாங்கோ, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோடி, ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ராமன் சிம்மன்ஸ். 

_____________________________________________________________________________________________________________

வரலாறு படைத்த ரிச்சா கோஷ்

இந்திய மகளிரணி கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் சிறப்பான பங்களிப்பு செய்ததுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் பேட்டரும் விக்கெட் கீப்பருமான ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்து அசத்தினார். 

மேலும், நம்.8 இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ரன்களை குவித்து வரலாறு படைத்துள்ளார். அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 48.5 ஓவர்களில் 252/7 ரன்கள் எடுத்து வென்றது. தெ.ஆ. சார்பில் 84 ரன்கள் எடுத்த நடினி கிளார்க் ஆட்ட நாயகி விருது வென்றார். இருப்பினும் இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் நாயகியாக கொண்டாடப்பட்டு வருகிறார். பலரும் இவரை மகளிரணியின் எம்.எஸ்.தோனி எனப் புகழ்ந்து வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து