எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், செப். - 27 - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானிகருக்கும், அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் இடையே காதல் என்று வங்கதேச பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ஹீனா யார் யாருக்கு போன் செய்தார் என்ற விவரத்தை கேட்டு அவரது கணவர் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறையை அணுகியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும்(34), அந்நாட்டு அதிபரின் மகனும், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோவுக்கும்(24) இடையே காதல் என்று பாகிஸ்தானில் பல வாரங்களாக கிசுகிசுப்பட்டது. இந்நிலையில் வங்கதேச பத்திரிக்கை ஒன்று இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டது. தன்னை விட கிட்டத்தட்ட 11 வயது குறைவான பிலாவலை அவர் காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் பாகிஸ்தானை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் செட்டிலாக முடிவு செய்துள்ளனராம். இது குறித்து அறிந்த சர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளாராம். அதற்கு பிலாவல் மணந்தால் ஹீனாவைத் தான் மணப்பேன் என்று கூறியுள்ளாராம்.
ஹீனாவை பிலாவல் மணந்தால் அவரது அரசியல் வாழ்க்கை அடியாகி விடுமே என்ற கவலையில் சர்தாரி உள்ளார் என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இந்த செய்தி உண்மையா, பொய்யா என்று பலரும் குழம்பிய நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஹீனாவின் தொழில் அதிபர் கணவரான பிரோஸ் குல்சார் தனது மனைவி யார், யாருக்கு போன் செய்து பேசுகிறார் என்ற தகவலைக் கேட்டு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளாராம். அதிலும் குறிப்பாக ஹீனா போன் செய்யும் இரண்டு எண்கள் யாருடையது என்று தெரிந்து கொள்ள அவர் விரும்புகிறாராம். இதன் மூலம் ஹீனா-பிலாவல் காதல் வதந்தி அல்ல என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


