முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடேல் பாலசிங்கத்திடம் விசாரணை: இங்கிலாந்திடம் இலங்கைகோரிக்கை

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு, செப். - 29 - தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கத்திடம் போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டை இலங்கை கோரியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆளுமை காலத்தில் அடேல் பாலசிங்கமும் புலிகளுக்கு உதவினார். போராட்டத்திற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ்ஈடுபட்டார் என்பது இலங்கையின் குற்றச்சாட்டு. மேலும் யுத்தத்துக்குப் பிந்தைய காலத்தில் வன்னி பிரதேசத்தில் கிடைத்த சாட்சியங்களும், ஆவணங்களும் இலங்கையிடம் இருப்பதாகவும், தற்கொலைத் தாக்குதல்களை அடேல் பாலசிங்கம் நியாயப்படுத்தி பேசியிருப்பதாகவும் இலங்கை கூறுகிறது. தமிழர்களின் ஆயுத வழியிலான விடுதலைப் போராட்டத்தை வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அடேல் பாலசிங்கம் கடிதம் எழுதியிருந்ததையும் இங்கிலாந்திடம் இலங்கை அரசு சுட்டிக் காட்டியுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு உதவியவர் என்ற அடிப்படையில் அடேல் பாலசிங்கத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இலங்கையின் கோரிக்கை ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்