முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 காசு குறைப்பு

சனிக்கிழமை, 17 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது தில்லி, நவ.17 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்ததையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 காசு குறைக்கப்பட்டுள்ளது. இது நள்ளிரவு  முதல் அமலுக்கு வந்தது.இதன் மூலம் தில்லியில் ரூ.68.19-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இனி ரூ.67.24-க்கு விற்கப்படும்.உள்ளூர் விற்பனை வரி மற்றும் வாட் வரி வித்தியாசம் காரணமாக ஊருக்கு ஊர் இந்த விலை வேறுபடும்.சென்னையைப் பொறுத்தவரை லிட்டருக்கு ரூ.1.20 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் ரூ.71.77 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.70.57 ஆகவும், மும்பையில், ரூ.74.73-லிருந்து ரூ.73.53 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.75.74-லிருந்து ரூ.74.55 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு அக்டோபர் 9 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 காசு குறைக்கப்பட்டது. எனினும், அதன் பின்னர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கமிஷன் தொகையை உயர்த்துவதற்காக மீண்டும் 2 ெகாசு உயர்த்தப்பட்டது. இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையாக இருப்பதையடுத்து, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் இறங்குமுகமாக உள்ளது. இதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் சரிந்தால் பெட்ரோல் விலையில் அது எதிரொலிக்கும், இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு கடந்த 2010 ஜூன் மாதம் பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டது. இதையடுத்து,சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கின்றன. எனினும், பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி, மாதம் 2 முறை விலை மாற்றி அமைக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago