முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெற பிரணாப் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜல்பாகுரி, ஏப்.16 - மேற்கு வங்காளத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ்பெற வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியில் இறங்கியுள்ளன.

இடது கம்யூனிஸ்ட்டு தலைமையில் இடதுசாரி கட்சிகள் மற்றொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சி பூசல்கள் இருப்பதால் அதிகாரப்பூர்வமான காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி  காங்கிரசார் பல தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். 

இப்படி போட்டியிட்ட 15 அதிருப்தி வேட்பாளர்கள்  காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

என்றாலும் பல தொகுதிகளில் இன்னமும்கூட பல போட்டி வேட்பாளர்கள் உள்ளனர்.

இவர்களையும் வாபஸ் பெறும்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் காங்கிரசார் போட்டியிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று  தான் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலன் கருதி இவர்கள் தங்களது சுயநல போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜல்பாகுரி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முன்னிலையில் இந்த வேண்டுகோளை பிரணாப் முகர்ஜி விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்