முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூர் டெஸ்ட்: இங்கிலாந்து ரன் எடுக்க திணறல்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

நாக்பூர், டிச 14 - இந்திய அணிக்கு எதிராக நாக்பூரில் நே ற்று துவங்கிய 4 -வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கி லாந்து அணி ரன் எடுக்க திணறி வருகிறது. இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்னை எடுத் து இருக்கிறது. இதில் 1 வீரர் அரை சதம் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில், பீட்டர்சன் நன்கு ஆடி அரை சதம் அடித்தார். டிரா  ட் அவருக்குப் பக்கபலமாக ஆடினார். பிரையரும், ரூட்டும் களத்தில் உள்ளனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 4 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அரங்கத்தில் நேற்று துவங்கியது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங் சில் 97 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணியின் முன்னணி வீர ரான பீட்டர்சன் அதிகபட்சமாக 188 பந் தில் 73 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்ட ரி அடக்கம். இறுதியில் அவர் ஜடேஜா வீசிய பந்தில் ஓஜாவிடம் கேட்ச் கொ டுத்து ஆட்டம் இழந்தார். 

அவருக்குப் பக்கபலமாக ஆடிய டிராட் 133 பந்தில் 44 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஜடேஜா வீசிய பந்தில் கிளீன் போல் டானார். 

6 -வது வீரராக இறங்கிய ரூட் 110 பந்தி ல் 31 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். இதில் 1 பவுண்டரி அடக்கம். தவிர, கீப்பர் பிரையர் 83 பந்தில் 34 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 3 பவுண்டரி அடக்கம். 

முன்னதாக கேப்டன் குக் 1 ரன்னிலும், காம்ப்டன் 3 ரன்னிலும், பெல் 1 ரன்னி லும் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 16 ரன்னிற்கு 2 விக்கெட்டை இழந்து இருந்தது. 

பின்பு டிராட் மற்றும் பீட்டர்சன் இருவ ரும் இணைந்து நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தொடர்ந்து ரூட் மற்றும் பிரையர் இருவரும் ஆடி வருகின்றனர். 

இந்தப் போட்டியில் இளம் வேகப் பந் து வீச்சாளரான இஷாந்த் சர்மா துவக்க த்தில் நன்கு பந்து வீசி கேப்டன் குக் மற்றும் காம்ப்டன் இருவரையும் அவு ட்டாக்கினார். 

இதனைத் தொடர்ந்து இந்த டெஸ்டில் அறிமுகமான ஜடேஜா அடுத்த 2 விக்கெட்டைக் கைப்பற்றினார். அவர் டிராட் மற்றும் பீட்டர்சன் ஆகிய மதிப்பு மிக்க விக்கெட்டுகளை சாய்த்தது குறிப்பிடத் தக்கது. பெல் விக்கெட்டை சாவ்லா கைப்பற்றினார். 

இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 3 ரன் னில் காம்ப்டனும், 16 ரன்னில் கேப்ட ன் குக்கும் ஆட்டம் இழந்தனர். பின்பு 102 ல் டிராட்டும், 119 ல் பெல்லும், 139 ல் பீட்டர்சனும் அவுட்டானார்கள். 

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். ஜடேஜா 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, சாவ்லா 1 விக்கெ ட் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்