முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.24 - தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று (23.12.2012) காலை 11 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை கழகத்தில் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கழக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய சுவிசேஷ திருச்சபையின் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம்,  திருச்சபை சென்னை பேராயத்தின் இணை பேராயர் ராஜாசிங், ஆற்காட் லுத்தரன் திருச்சபைகள் மாமறை டாக்டர் ஆர்.டி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் உடைகளும் மற்றும் அனைவருக்கும் பிரியாணியும், கேக்குகளும் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வழங்கினார். இவ்விழாவில் பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் எஸ். ஆஸ்டின், ஏ.ஆர். இளங்கோவன், தேர்தல் பணி செயலாளர் க. பாண்டியராஜன், எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட செயலாளர் க. செந்தாமரைக்கண்ணன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என். ராஜன், வடசென்னை மாவட்ட செயலாளர் வி. யுவராஜ், மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம். காமராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் இவ்விழாவில் டெல்லி மாநில இளைஞரணி செயலாளர் செளகத் ஷெரீப், மாநில இளைஞரணி துணை செயலாளர் கு. நல்லதம்பி, எம்.எல்.ஏ., மாநில ஆசிரியர் ​ பட்டதாரி அணி செயலாளர் பேராசிரியர் ரவீந்திரன், மாநில தொழிற்சங்க செயலாளர் எம். செளந்திரபாண்டியன், மாநில தொழிற்சங்க துணை தலைவர் மீஞ்சூர் இரா.சு. சேகர், மாநில தொழிற்சங்க துணை செயலாளர்கள் எம். ஈஸ்வரன், பி. வேணுராம், ஆதிலிங்க பெருமாள், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் எம்.வி.எஸ். ராஜேந்திரநாத், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி. முருகேசன், எம்.எல்.ஏ., விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன், எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச். சேகர், எம்.எல்.ஏ., ஆர்.எம். பாபுமுருகவேல், எம்.எல்.ஏ., ஆகியோரும் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony