முக்கிய செய்திகள்

புதுச்சேரி கவர்னரை திரும்பப் பெற அ.தி.மு.க கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      ஊழல்
AIADMK flag 5

 

புதுச்சேரி,ஏப்.18 - பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் புதுச்சேரி லெப்டினென்ட் கவர்னர் இக்பால்சிங்கை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் ஏ. அன்பழகன் நேற்று புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கறுப்பு பண முதலை ஹசன் அலி பாஸ்போர்ட் பெற்றது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் இக்பால்சிங் சிக்கியிருக்கிறார். 2009 ம் ஆண்டு இவர் பதவியேற்றது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளார். கவர்னர் பதவி என்பது அரசியல் சட்டத்தில் ஒரு புனிதமான பதவி. அதற்கு எந்தவொரு கறையும் ஏற்பட்டு விடக் கூடாது. அப்படி ஏற்பட்டால் அது முற்றிலும் ஆட்சேபனைக்குரியது. எனவே ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இன்னும் 2 நாட்களில் கவர்னர் இக்பால்சிங்கை திரும்பப் பெற வேண்டும். அரசியல் சட்டத்தின் புனிதத்தை காக்க ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். இவ்வாறு புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் தெரிவித்தார். ஆனால் கவர்னர் மீதான குற்றச்சாட்டை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: