முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் திரைப்படம் கேரளாவில் வெளியானது

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜன.26 - பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கமல் ஹாசன் நடித்தும் தயாரித்தும் உள்ள விஸ்வரூபம் திரைப்படம் நேற்று கேரளாவில் வெளியானது. 80-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. அதேசமயத்தில் ஐதராபாத்தில் திரையிட அனுமதிக்கப்படவில்லை

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம் மதத்திற்கு எதிராக கருத்து கூறப்பட்டிருப்பதாக கூற அந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் காவல்துறையினரிடம் புகார் செய்தனர். இதனையொட்டி இந்த திரைப்படத்திற்கு 15 நாட்கள் தடையை தமிழக அரசு விதித்துள்ளது. இதனையொட்டி நேற்று வெளியாக வேண்டிய விஸ்வரூபம் வெளியாகவில்லை. தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்தநிலையில் கேரள மாநிலத்தில் நேற்று திட்டமிட்டபடி விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. மாநிலம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 25 சதவீதம் பேர் முஸ்லீம் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேசமயத்தில் தமிழகத்தில் தடை விதித்து இருப்பது போல் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது முஸ்லீம் மக்களின் மத உணர்வை புண்படுத்தும்படி உள்ளது. அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லீம் மதத்தை சேர்ந்த பல அமைப்புகள் புகார் செய்ததையொட்டி ஐதராபாத்தில் இந்த படம் திரையிடப்படுவதற்கு ஆந்திர அரசு தடை விதித்தது. ஐதராபாத் நகரில் உள்ள திரைப்படங்களில் விஸ்வரூபம் படத்தை திரையிடக்கூடாது என்று நகர போலீஸ் கமிஷனர் திரைப்பட விநியோகஸ்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார். வரும் 28-ம் தேதி வரை இந்த படத்தை திரையிட அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாநிலத்தின் இதர பகுதிகளில் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago