முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை: அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.7 - இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 75 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ராஜ்யசபாவில் அமைச்சர் பபன்சிங் கோடவர் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பாராளுமன்ற விவகார ராஜாங்க அமைச்சர் பபன்சிங் கோடவர் கூறியதாவது: 

கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.36 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 1,61,800 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால் 75 ஆயிரம் குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது துரதிருஷ்டவசமானதாகும். 

எல்லா காவல் நிலையங்களிலும் குழுக்களை அமைத்து இதுபோன்ற வழக்குளில் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து விசாரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக  எலலா மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது என்றார்.

நாடு முழுவதும் குழந்தைதள் காணாமல்போவது அதிகரித்துள்ளது      என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago