முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23 மொழிகளில் பேசும் அமெரிக்க சிறுவன்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஏப். 13 - அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த சிறுவன் மோதி டோனர் என்ற சிறுவன் 23 மொழிகளில் பேசும் புலமை பெற்று உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளான்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த சிறுவன் மோதி டோனர். (வயது 17), இந்த இளம் வயதில் 23 மொழிகளில் பேசும் புலமை பெற்றுள்ளான். இச்சிறுவன் குறுகிய காலத்தில் மொழி ஒன்றில் பேசும் ஆற்றலை பெற்றதால் நிபுணர்களால் ஹைபர் பாலிகிளாட் என வகைப்படுத்தப்பட்டு உள்ளான்.

இது குறித்த வீடியோ பதிவை யூ ட்யூப் வழியே இணையதளத்தில் பரவ செய்ததில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனை ஆர்வமுடன் பார்த்தனர். மேலும், சிறுவனின் தனி திறனை ஊக்கப்படுத்தவும் செய்தனர். முதல் முறையாக ஹீப்ரூ மொழியினை கற்றதில் இருந்து இந்த ஆர்வம் அவனுக்கு தொடங்கியதாம்.

நியூயார்க் நகர கார் ஓட்டிகள், ரெஸ்டாரண்ட்களில் (விடுதி) உள்ளவர்கள் ஆகியோருடன் பேசியும் மற்றும் ்மெயில், ஸ்கைப் வழியாக உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டும் தனது பேச்சு திறமையை வளர்த்துள்ளான். அதன்படி, இந்தி மொழி உட்பட 23 மொழிகளை பேச டோனர் பயிற்சி பெற்றுள்ளான். இது குறித்து அவன் கூறும்போது, வெளிநாட்டு மொழிகளை கற்பதற்காக அந்நாட்டு நபர்களுடன் பேசும் வாய்ப்பு அமையும்போது, என்னை அவர்களது மொழிகளில் மிக கேவலமாக பேசி புண்படுத்தினர் என்றும் கூறியுள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்