முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் உதயன் அலுவலகம் மீது மீண்டும் தாக்குதல்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

யாழ்ப்பாணம், ஏப். 14 - இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரபல தமிழ் நாளிதழான உதயன் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தி எந்திரங்களுக்கு தீ வைத்து இருக்கின்றனர். அங்கு துப்பாக்கிச் சூடும் நடத்தி விட்டு சென்றிருப்பதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஹெல்மெட் அணிந்த படி மூன்று பேர் நுழைந்திருக்கின்றனர். அவர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்த ஊழியர்களை விரட்டியடித்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். பின்னர் அவர்களில் இரண்டு பேர் உதயன் அலுவலகத்தின் அச்சகப் பகுதிக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்த பணியாளர்களை விரட்டியடித்துள்ளனர். அங்கு மின் இணைப்பை துண்டித்து விட்டு எந்திரங்கள், பேப்பர் கட்டுகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கின்றனர். அண்மைக் காலமாக உதயன் அலுவலகம் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony