முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஸ்டன் குண்டு வெடிப்பு: பிரணாப் - பிரதமர் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 17 - பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் நேற்று நடந்த மாரத்தான் போட்டி நிறைவடையும் இடமான கோப்லி பிளாசாவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து பிரதமர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இந்திய நாட்டு மக்கள் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony