ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி - டெல்லி ஏமாற்றம்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், மே. 8 - ஐ.பி.எல். போட்டியில் ஜெய்பூரில் நே ற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ராஜ ஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித் தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில், ரகானே மற்றும் டிராவிட் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக ஷேன் வாட்சன் ஆடி னார். 

முன்னதாக பெளலிங்கின் போது, ஷா ன் டெய்ட், பால்க்னர், வாட்சன் , ஆர். பின்னி, திரிவேதி மற்றும் டம்பே ஆகி யோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியின் ரன் குவிப் பைக் கட்டுப்படுத்தியது. 

ஐ.பி.எல். போட்டியின் 52-வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் உல்ள சவாய் மா ன்சிங் அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 4 விக் கெட் இழப்பிற்கு 154 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 1 வீரர் அரை சதம்  அடித்தார். 

டெல்லி அணி தரப்பில், ரொகெர் 40 பந்தில் 64 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் ஜெயவர்த்தனே 31 பந் தில் 34 ரன்னையும், ஜாதவ் 21 பந்தில் 23 ரன்னையும், சேவாக் 11 ரன்னையும், வார்னர் 13 ரன்னையும் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில், ஆர். பின் னி 13 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, பால்க்னர், வாட்சன் மற்றும் திரிவேதி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி 155 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை டெல்லி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்னை எடு த்தது.

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ் தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடை த்தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில் ரகானே அதிரடியாக ஆடி, 45 பந்தில் 63 ரன்னைஎடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். கேப்டன் டிராவிட் 48 பந்தில் 53 ரன் எடுத்தார். இதில் 7 பவு ண்டரி அடக்கம். தவிர, ஷேன் வாட்ச ன் 14 பந்தில் 28 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

டெல்லி அணி சார்பில், கெளல் 23 ரன் னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். உமேஷ் யாதவ், மார்கெல், நெகி ஆகி யோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரகானே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: