முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதான தரகர்களை காவலில் விசாரிக்க போலீசார் மனு

திங்கட்கிழமை, 20 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.21 - கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான 6 தரகர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு செய்துள்ளனர். இதன் மூலம் மேலும் பல திரை மறைவு உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகிய 3 பேர் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ்டுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் 13 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில், சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஸ் பஜாஜ், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால், ராஜா அண்ணாமலைபுரம் வேதாச்சலம், புரசைவாக்கம் லக்கி என்ற நர்பத், சவுகார் பேட்டையைச் சேர்ந்த பிரவின் குமார் என்ற பப்பு கவுதம் ஆகிய 6 கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து சுமார் ரூ. 14 லட்சம் ரொக்கம், 10-க்கும் மேற்பட்ட லேப்-டாப், கம்ப்யூட்டர் சாதனங்கள், வயர்லெஸ் போன்கள், 24 செல்போன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த கிரிக்கெட் சூதாட்டக்குழுவின் தலைவனாக அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்வதற்கு முன்னதாக, பிரசாந்த் வெளிநாட்டுக்கு தப்பிஓடி தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை கைது செய்ய போலீசார் சர்வதேச போலீஸ் உதவியை நாட தீர்மானித்துள்ளனர். கைதானவர்கள் தவிர மேலும் 20 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர்களில் இதுவரை 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ் மும்முரமாக உள்ளது. சிலர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளதால் சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கைதான தரகர்களை மொத்தம் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்