முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பாட் பிக்சிங்: ஷில்பா ஷெட்டி கணவரிடம் விசாரணை

புதன்கிழமை, 5 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 6 - ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ்ஈடுபட்டதாக கூறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இருவருக்கு ஜாமீன் கூட மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளருமான ராஜ் குந்த்ராவிடம் நேற்று டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட புகார்கள் குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மேலும் பல வீரர்கள் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் கூறிவரும் நிலையில், அவர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony