முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அலெக்ஸ் மரணம் திருச்சியில் இன்று உடல் அடக்கம்

திங்கட்கிழமை, 2 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே.- 2 - பிரபல வில்லன் நடிகர் அலெக்ஸ் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று திருச்சியில் அடக்கம் செய்யப்படுகிறது. வள்ளி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானவர் அலெக்ஸ் (வயது 52). மிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்பட ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். சிறந்த வில்லனுக்கான விருது பெற்றுள்ள இவர், கலைமாமணி விருது, செவாலியர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். இவர் ஒரு முன்னாள் ரயில்வே ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மேஜிக் நிபுணரும் ஆவார். 24 மணி நேரம் தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை புத்தகத்திலும், லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
நடிகர்கள் சங்கத்தில் உதவி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த நடிகர் அலெக்ஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. 4.25 மணிக்கு அலெக்ஸ் மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான திருச்சி துரைசாமிபுரத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த நடிகர் அலெக்சுக்கு திரவியம் மேரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago