எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மே.5 - 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மொரீசியஸ் தீவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த முறைகேடு பணம் கோடிக்கணக்கில் மொரீசியஸ் உள்ளிட்ட பல வெளிநாஉகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டிருப்பது பற்றி மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துகிறது. இந்த முறைகேடு தொடர்பான தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மொரீசியஸ் செல்கிறார்கள். ஷாகித் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மொரீசியஸ் தீவில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரையொட்டி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. வருகிற 15ம் தேதி இந்த அதிகாரிகள் குழு மொரீசியஸ் செல்கிறது. அங்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டிருப்பது பற்றி தகவல்கள் சேகரித்து விசாரிக்கிறார்கள். அரசியல் தரகர் ராடியாவின் டெலிபோன் உரையாடலில் கிடைத்த தகவலின் பேரில் சி.பி.ஐ. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் பணபரிமாற்றம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தயுள்ளது. மேலும் மொரீசியஸ் தீவுக்கு சென்று விசாரணை நடத்த இருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் மூலம் சட்டவிரோத பண முதலீடு விபரங்கள் வெளியே தெரியவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


