எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மே 8-
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இம்மாதம் 14 ம் தேதிவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை கனிமொழி தினமும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ம் தலைமுறையினருக்கான (2 ஜி.) தொழில்நுட்ப வசதியை அளிப்பதற்காக தொலைத் தொடர்புத் துறை சார்பில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்களை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தான் வழங்கியுள்ளார். இந்த ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய கணக்கு தணிக்கைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த இழப்புக்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் முழுப்பொறுப்பு என்றும் அந்த குழு குற்றம் சாட்டியுள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு இருந்தன. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆ.ராசா அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் பிறகு ராசாவை கைது செய்து தங்கள் காவலில் எடுத்தனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததும் ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் இவர் இதே சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் ஆ.ராசாவின் உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆ.ராசா உள்ளிட்ட இவர்கள் 9 பேரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயமடைந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாக கலைஞர் டி.வி. பிறகு தெரிவித்தது. இருந்தாலும் அந்த ரூ.214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பது மர்மமாகவே இருந்தது. இந்த கலைஞர் டி.வி.யில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் கனிமொழி கூட்டுச் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து இவர்கள் இருவரையும் மே 6 ம் தேதி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(மே 6) இந்த கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழி, சரத்குமார் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் வாத பிரதிவாதங்கள் முடிவடையாத நிலையில் இந்த விசாரணயை நீதிபதி ஷைனி நேற்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி நேற்றும் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது கலைஞர் டி.வி.யை கனிமொழிதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் அவரே கவனிக்கிறார். இந்த கலைஞர் டி.வி.தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற பால்வா குழுமத்திடம் இருந்து ரூ. 200 கோடியை பெற்றுள்ளது எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் வாதாடினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் அந்த டி.வி.யை நிர்வகிப்பவராக இருக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் கட்டுப்பாடுகளையும் இயக்குபவர் கனிமொழிதான் என்றும் எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதை தாம் ஆட்சேபிப்பதாகவும் அவர் கூறினார்.
கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன. அந்த கலைஞர் டி.வி.க்குத்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக பெற்ற நிறுவனத்தினரிடம் இருந்து ரூ. 200 கோடி சென்றது என்றும் லலித் வாதாடினார். இந்த ரூ.200 கோடி பரிமாற்றத்தில் கனிமொழிக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். ரூ. 200 கோடி பணப் பரிமாற்றத்தில் கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே இவர்கள் இருவருக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற குற்றவாளிகளைப் போல நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப வேண்டும் என்றும் லலித் தனது வாதத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் கருணாநிதி குடும்பத்தினருக்கே இருப்பதால் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் கலைஞர் டி.வி.யில் உள்ளன. ஆனால் இந்த டி.வி.யின் நிர்வாக பணிகளில் அவர் தீவிரமாக எதிலும் ஈடுபடவில்லை. அந்த டி.வி.யை 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும், சரத்குமாரும்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த ஜாமீன் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, இவற்றின் மீதான தீர்ப்பை வருகிற 14 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கனிமொழியும், சரத்குமாரும் தினமும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.