முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.27 - சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.கணபதி மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.கணபதி உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் கணபதி சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony