முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமுகர் கொலை: திமுக மு.ம. தலைவர் மருமகன் கைது

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

மதுரை,செப்.30 - மதுரையில் அதிமுக பிரமுகர் கொலைவழக்கில் தி.மு.க. முன்னாள் மண்டலத்தலைவர் குருசாமியின் மருமகன் கைது செய்யப்பட்டார். மேலும் 2பேர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். மதுரை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் மயில் முருகன்,(42). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். மேலும் 72-வது வட்ட அதிமுக பிரதிநிதியாகஅவும் இருந்தார். இவரை கடந்த 25-தேதி ஆட்டோவில் வந்த கும்பல் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கு படுகொலை செய்தது.

இது தொடர்பாக மாநகராட்சியின் கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி(திமுக) அவர்ருடைய மகன் வி.கே.ஜி.மணி, உறவினர் அலெக்ஸ், மருமகன் காட்டுராஜா, மைத்துணர் மாதவர் மாட்டு மணி என்கிற மணிகண்டன், இருளப்பன், செங்குட்டுவன் என்கிற சடையாண்டி ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  

கடந்த 23-ம் தேதி மதுரையில் திமுக பிரமுகர் பாம்பு பாண்டி  கொலை  செய்யப்பட்டத்ற்கு பபழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொல தொடர்பாக வி.கே. குருசாமி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் வி.கே.குருசாமியின் மகன் மணி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். 

காமராஜர்புரம் பகுதியில் பதுங்கி இருந்த வி,கே.குருசாமியின் மருமகன் நல்லுச்சாமியை தெப்பக்குஅளம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கீரைத்துரையை  சேர்ந்த கிருணன் மகன் முனியசாமி என்ற கணக்கன், மேல அனுப்பானடி பாண்டி மகன் காளீஸ்வரன் ஆகிய 2பேர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony