முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் காங்.கூட்டணி அரசு சந்திக்கவிருக்கும் பிரச்சினைகள்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,மே.15 - கேரள மாநிலத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்கவிருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசானது நிர்வாக ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபை தேர்தலில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. அதனால் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொர்ப்ப மெஜாரிட்டிதான் கிடைத்துள்ளது. மொத்தம் உள்ள 240 தொகுதிகளில் 72-ல் தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு காரணம் லோக்சபை தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் மாநிலத்தில் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி திட்டமிட்டு செயல்பட்டதுதான். அதனால் அந்த கூட்டணியால் மீண்டும் வெற்றிபெற முடியாவிட்டாலும் காங்கிரஸ் கூட்டணி அதிக அளவில் மெஜாரிட்ட பெற முடியாமல் தடுத்துவிட்டது. இதற்கு காரணம் அமைப்பு ரீதியான செயல்பாடுகளும் நிர்வாகம்தான். 

இந்தநிலையில் காங்கிரஸ் கூட்டணி அரசு இன்றோ அல்லது நாளையோ பதவி ஏற்கலாம் என்று தெரிகிறது. முதல்வராக உம்மன் சாண்டி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அவர் ஒரு திறமையானவர்தான். அதேசமயத்தில் நிர்வாக ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டணி கட்சிகளுடன் சட்டசபைக்கு வெளியிலும் உள்ளேயும் இணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். இதில் கொஞ்சம் விலகிச்சென்றாலும் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு காங்கிரசுக்குதான் என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர்களை தேர்வு செய்வதில் இருந்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். கேரளாவில் முதல்வரை தேர்வு செய்ய மத்திய பார்வையாளர்களாக காங்கிரஸ் தலைவர்கள் மதுசூதனன் மிஸ்திரி, மோஷினா கித்வாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்