முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் திடீர் கண்ணையா மரணம்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.நவ.19 - 500_க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த திடீர் கண்ணையா சென்னையில் நேற்றுமுன்தினம மரணம் அடைந்தார். அவருக்கு (வயது 77). அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், ஏட்டிக்கு போட்டி, என்ன பெத்த ராசா உள்பட 500_க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திடீர் கண்ணையா.

சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே படங்களில் நடித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிபட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் மூச்சு விடமுடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக அவரை அயனாவரத்தில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவரது உடல் தகனம்  நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு அயனாவரம் சுடுகாட்டில் நடந்தது. திரைஉலகினர் பலர் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த திடீர் கண்ணையாவுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago